சுங்க வம்சம்



சுங்கர் எனப்படுவோர் மௌரியர் சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய பிருகத்ரதன் என்பவனின் அரண்மனையில் இருந்த புஷ்யமித்ர சுங்கன் என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சிபீடம் ஏறிக் கொண்டான். சுங்கர்களின் ஆட்சி கி.மு 185ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு 75 வரை 112 ஆண்டுகள் நிலவியது. இக்காலத்தில் அசோகனாலும் அவன் பின் வந்த மௌரியர்களாலும் வளர்க்கப்பட்ட பௌத்தம் பெரு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சுங்கர்கள் பிராமண குலத்தினை சார்ந்தவர்களாக இருந்தமையும் இதற்குக் காரணம் என்பர்.

சுங்க மன்னர்களுள் புஷ்யமித்திரனை அடுத்து "அக்கினிமித்திரன்", "வசுமித்திரன்", "பாகவதன்", "தேவபூதி", "சுசசுதா" முதலான மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றது.  
இவர்கள் காலத்தில் பாடலிபுரம், விதிசா முதலான இடங்கள் தலைநகராக விளஙக்கின.


புஷ்யமித்ர சுங்கன் தோற்றுவித்த சுங்க வம்சத்தின் கடைசி அரசன், தேவபூபதி, அவனுடைய பிராமன அமைச்சர், வாசுதேவ கண்வர். அவனைக்  கொண்று வாசுதேவ  கண்வர், கண்வர்  வம்ச அரசைத் தோற்றுவித்தார்.