மௌரியப் பேரரசு



மௌரியப் பேரரசு (322–185 கிமு), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இது இன்றைய பட்னாவுக்கு அருகில் இருந்தது. இப்பேரரசு கிமு 322 ஆம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியனால் உருவாக்கப்பட்டது.

நந்ந வம்சத்தின் இறுதி மன்னனான தனநந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. கௌடில்யர் சந்திரகுப்தனை துணையாகக் கொண்டு பாடலிபுரத்தில் ஏற்படுத்திய புரட்சியே மௌரியரது அரசாட்சிக்கு வித்திட்டது.
மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள்: சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி

தக்சசீலம் முதல் கல்வி கற்றுக்கொள்ளும் இடம்.

படையெடுத்து போர் செய்து வெற்றி பெறுவது- திக் விஜயம்.
மக்களிடம் தர்மம் வளர்க்க மேற்கொண்ட பயணம்தர்ம விஜயம்.
 
சந்திரகுப்தன் (கிமு 325 - கிமு301)
பிந்துசாரர் (கிமு 301 - கிமு 273)
அசோகர் (கிமு 273 - கிமு 236)
பிற்கால மௌரியர் (கிமு 236 - கிமு 185)
பிற்கால மௌரியர்களின் வரிசையில் தசரதன், குணாளன், மகேந்திரன், ஜலவுகன், பிருஹத்ரதன் போன்றோர் விளங்குகின்றனர்.  
இவர்களுள் பிருஹத்ரதனே மௌரிய வம்சத்தின் இறுதி மன்னனாக விளங்குகின்றான்.
அரசுத் தலைவர் சாம்ராட் (பேரரசன்)என அழைக்கப்பட்டான்

நாணயம்  -வெள்ளி (இங்கொட்ஸ் மற்றும் பனாஸ்)

சந்திரகுப்த மௌரியர்:
       சந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (Sandrokuptos), சாண்ட்ரோகாட்டோஸ் (Sandrokottos), ஆண்ட்ரோகாட்ட்டஸ் (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார்.

சாணக்கியர்(கௌடில்யர்):
       நந்தவம்சத்து அரசவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான சாணக்கியர்(கௌடில்யர்) நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார். பாடலிபுத்திரத்திலிருந்து(இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்

அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது.

1ம் காண்டம் - அரசன் அமைச்சரவை பற்றிக் கூறுவது
2ம் காண்டம் - பொருளியல் அரசியல் சட்டங்கள் பற்றிக் கூறுவது
3ம் காண்டம் - மைய, மாநில ஆட்சி, போர் முறை

மெகஸ்தனிஸ்:
     மெகஸ்தெனஸ் (En:Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், சிரியாவின், முதலாவது செலூக்கஸ் என்னும் மன்னனின் தூதுவராக இருந்தார். இண்டிகா என்னும் நூலை எழுதினான்

பிந்துசாரர்:
பிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் ஆவார். இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார். தெற்கே தோழமை அரசுகளான சேர, சோழ, பாண்டியர்களைத் தவிரவும் கலிங்க நாட்டைத் தவிரவும் இந்தியாவின் ஏனைய பகுதிகளை இவர் வெற்றி கொண்டார்.


மாமன்னர் அசோகர் இவரது மகன் ஆவார்
இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
பிந்து சாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

அசோகர்:
  • அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.
  • தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்),சங்கமித்தையும். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.
  • அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். 
  • சாலை ஓரம் மரங்களை வைத்தவர்
  • பாடலிபுத்திரத்தில்(தற்போதைய பாட்னா) மூன்றாவது புத்த மா நாட்டை  நடத்தினார் இந்த மா நாட்டிற்க்கு தலைமை வகித்தவர் உபகுப்தர்   (Moggaliputta Tissa)  என்னும் புத்த துறவி   
  • தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது,மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்
  • அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.